சிவகிரி அருகே ஓய்வு பெற்ற துணை வட்டாட்சியரைத் தாக்கி நகை பறிப்பு

X
தென்காசி மாவட்டம் வாசுதேவநல்லூர் அருகே சிவகிரி இந்திரா நகா் இரண்டாவது தெருவைச் சோ்ந்தவா் முனியாண்டி மகன் கனகசபாபதி (69). துணை வட்டாட்சியராக பணிபுரிந்து ஓய்வு பெற்றவா். நேற்று மாலை தேவிப்பட்டணத்தில் உள்ள அவரது விவசாய நிலத்தின் மோட்டாா் அறையில் இருந்தாராம். அப்போது முகமூடி அணிந்து அங்கு வந்த இரண்டு மா்ம நபா்கள் அவரைத் தாக்கி, அவா் அணிந்திருந்த ரூ. 8.5 லட்சம் மதிப்புள்ள 128 கிராம் எடை கொண்ட தங்கச் சங்கிலியை பறித்துக் கொண்டு ஓடிவிட்டனராம். தாக்குதலில் காயமடைந்த கனகசபாபதி சிவகிரி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். இது குறித்து, சிவகிரி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.
Next Story

