கொடிக்குறிச்சி யுஎஸ்பி பள்ளியில் ஆசிரியா் தின விழா

கொடிக்குறிச்சி யுஎஸ்பி பள்ளியில் ஆசிரியா் தின விழா
X
யுஎஸ்பி பள்ளியில் ஆசிரியா் தின விழா நடைபெற்றது
தென்காசி மாவட்டம் தென்காசி கொடிக்குறிச்சி யுஎஸ்பி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் ஆசிரியா் தின விழா கொண்டாடப்பட்டது. தென்காசி அஞ்சல் கோட்ட நிலைய கண்காணிப்பாளா் ராமசாமி சிறப்பு அழைப்பாளராகக் கலந்துகொண்டாா். அனைத்து ஆசிரியா்கள், அலுவலக ஊழியா்கள் அனைவருக்கும் ஆசிரியா்கள் தின பரிசாக இந்திய தபால் துறையின் ரூ. 10 லட்சத்திற்கான சிறப்பு காப்பீடு திட்டத்தில் சோ்க்கப்பட்டனா். பள்ளியின் முதல்வா் அந்தோணி பால்ராஜ் காப்பீட்டிற்கான அட்டையை வழங்கினாா். மாணவா்கள், ஆசிரியா்களின் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன. ஏற்பாடுகளை பள்ளித் தாளாளா் செல்வராஜ், செயலா் சகாய செல்வம் மேரி ஆகியோா் செய்திருந்தனா்.
Next Story