கோவையில் கல்லூரியில் ஓணம் பண்டிகை கோலாகலம் !
கோவை அரசூரில் உள்ள கேபிஆர் பொறியியல் கல்லூரியில் ஓணம் பண்டிகை உற்சாகமாகக் கொண்டாடப்பட்டது. கேரள பாரம்பரியத்தை வெளிப்படுத்தும் வகையில் மாணவ, மாணவிகள் கசவு புடவை, வேட்டி அணிந்து கலந்து கொண்டனர். கல்லூரி வளாகம் அத்தப்பூ கோலங்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தது. செண்டை மேளத்துக்கு ஏற்ப மாணவர்கள் ஆடிய நடனம் பார்வையாளர்களை கவர்ந்தது. குறிப்பாக, சிவகார்த்திகேயன் நடித்த டான் திரைப்படத்தின் கலாச்சார காட்சிகள் எடுக்கப்பட்ட அதே இடத்தில் மாணவர்கள் உற்சாகமாக நடனமாடிய காட்சி அனைவரையும் ஈர்த்தது. பாரம்பரிய ஓணம் சத்யா உணவு பரிமாறப்பட்டு, மாணவர்கள், ஆசிரியர்கள், நிர்வாகத்தினர் ஒருவருக்கொருவர் வாழ்த்துகளை பகிர்ந்து கொண்டனர்.
Next Story




