கோவை சிங்காநல்லூரில் அதிமுக எழுச்சி பிரச்சாரம் ஆலோசனை கூட்டம் !
கோவை சிங்காநல்லூர் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட பகுதிகளில், முன்னாள் முதல்வரும் அதிமுக பொதுச்செயலாளருமான எடப்பாடி கே. பழனிசாமி பங்கேற்க உள்ள “மக்களை காப்போம் – தமிழகத்தை மீட்போம்” எழுச்சி பிரச்சாரத்தையொட்டி ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணியின் வழிகாட்டுதலின் பேரில், தொகுதி கழக செயலாளர் சிவக்குமார் தலைமையில் நடந்த இக்கூட்டத்தில், கோவை மாநகர் மாவட்ட செயலாளரும் எம்.எல்.ஏ.வுமான அம்மன் கே. அர்ச்சுணன், சிங்காநல்லூர் எம்.எல்.ஏ. கே.ஆர். ஜெயராம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். நிர்வாகிகளுக்கு அழைப்பிதழுடன் சட்டை, வேட்டி, பட்டு சேலைகள் வழங்கப்பட்டன. மேலும் ஏறு பூட்டிய மாட்டு வண்டியில் வீடு வீடாகச் சென்று தாம்பூள, சீருடன் மக்களுக்கு அழைப்பிதழும் வழங்கப்பட்டது. செப்டம்பர் 13 அன்று மசக்காளிபாளையம் சாலையில், பாலன் நகர் வளைவு அருகில் எடப்பாடி பழனிசாமி தலைமையில் எழுச்சி பிரச்சாரம் நடைபெற உள்ளது. இந்நிகழ்ச்சியில் மாணவரணி செயலாளர் சிங்கை ராமச்சந்திரன், தேர்தல் பொறுப்பாளர் சிவபிரசாந்த், சிறுபான்மை பிரிவு இணை செயலாளர் சி.டி.சி. ஜப்பார், மகளிரணி செயலாளர் லீலாவதி உண்ணி, மாணரணி மணிகண்டன், பொதுக்குழு உறுப்பினர் மனோகரன், பீளமேடு துரைசாமி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
Next Story



