கோவை: ஓணம் பண்டிகை -பேருந்து நிலையங்களில் அலை மோதிய கூட்டம்
ஓணம் பண்டிகையை முன்னிட்டு, கோவை உக்கடம் மற்றும் காந்திபுரம் பேருந்து நிலையங்களில் நேற்று மதியம் முதல் பயணிகள் கூட்டம் அதிகரித்தது. ஓணம் பண்டிகை, வார இறுதி மற்றும் மிலாதி நபி விடுமுறைகள் தொடர்ச்சியாக அமைந்துள்ளதால், கேரளா மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் பெருமளவில் சொந்த ஊர் மற்றும் சுற்றுலா தலங்களுக்கு பயணித்து வருகின்றனர். இதனால் கோவை முழுவதும் போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டது. மேலும், குறைந்த அளவில் பேருந்துகள் இயக்கப்படுவதால் பயணிகள் சிரமம் அனுபவித்து வருகின்றனர்.
Next Story



