மும்பையில் இருந்து கோவைக்கு ரயிலில் போதை மாத்திரைகள் கடத்தி விற்பனை : ஆறு பேர் கைது !

மும்பையில் இருந்து ரயிலில் கடத்தி வந்த 1,200 போதை மாத்திரைகள், 700 கிராம் கஞ்சா ரூ.5 லட்சம் மதிப்பில் பறிமுதல்.
கோவை குனியமுத்தூரில் போதை மாத்திரைகள் விற்பனை செய்த ஆறு பேரை போலீசார் கைது செய்தனர். மும்பையில் இருந்து ரயிலில் கடத்தி வந்த 1,200 போதை மாத்திரைகள், 700 கிராம் கஞ்சா, 6 செல்போன்கள் ஆகியவை ரூ.5 லட்சம் மதிப்பில் பறிமுதல் செய்யப்பட்டன. கைதானவர்கள் பியாசாலி, அப்துல் ரகுமான், சரண்ராஜ், கவிநிலவன், நவுபல், சர்பிக் அலி என தெரிவிக்கப்பட்டுள்ளது. இவர்களுக்கு முன்னரும் போதைப்பொருள் தொடர்பான வழக்குகள் இருப்பதாகவும், கல்லூரி மாணவர்கள், இளைஞர்களை குறிவைத்து மாத்திரைகளை அதிக விலையில் விற்பனை செய்ததாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.ஆறுபேரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு நேற்று கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.
Next Story