தலைமறைவான இரண்டு குற்றவாளிகள் கைது

தலைமறைவான இரண்டு குற்றவாளிகள் கைது
X
திருட்டு வழக்கில் விசாரணைக்கு ஆஜராகாமல் தலைமறைவான 2 பேர் கைது
மூலனூர் பகுதிகளில், கடந்த சில மாதங்களாக பூட்டிக்கிடக்கும் வீடுகளை நோட்டமிட்டு, நகை மற்றும் பணத்தை மர்ம நபர்கள் திருடிச் சென்றனர். இதுகுறித்த புகாரின் பேரில், மூலனூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபர்களை தேடி வந்தனர். மேலும், திருட்டு நடந்த வீடுகைளின் அருகில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமரா காட்சிகளை போலீசார் ஆய்வு செய்தனர். இதையடுத்து, வீடுகளில் திருடியது சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தை சேர்ந்த எலும்புருக்கி ராமச்சந்திரன் (வயது42), மானாமதுரை கச்சாத்த நல்லூரை சேர்ந்த குட்டை பாண்டி என்ற பாண்டி (46) ஆகிய 2 பேரையும் போலீசார் கைது செய்தனர். அதன்பின்னர் ஜாமீனில் வெளியே வந்த அவர்கள், வழக்கு விசாரணையின் போது திருப்பூர் கோர்ட்டில் ஆஜராகாமல் தலைமறைவாக இருந்தனர். இதையடுத்து அவர்களுக்கு பிடிவாரண்டு பிறப்பித்து கோர்ட்டு உத்தரவிட்டது. தொடர்ந்து தலைமறைவாக இருந்த அவர்களை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டது. இதையடுத்து தலைமறைவாக இருந்த ராமச்சந்திரன், பாண்டி ஆகியோரை தனிப்படை போலீசார் கைது செய்தனர். பின்னர் அவர்கள், கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.
Next Story