ஆட்சியர் அலுவலகம் எதிரில் சாலைப் பணிகள்:

ஆட்சியர் அலுவலகம் எதிரில் சாலைப் பணிகள்:
X
ஆட்சியர் அலுவலகம் எதிரில் சாலைப் பணிகள்:
தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரில் சாலைப் பணிகள் நடைபெறும் நிலையில், வலைகள் அமைத்து பாதுகாப்பான முறையில் பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.  இதுகுறித்து ஏஐசிசிடியு - சிபிஐ (எம் - எல்) மாவட்ட தலைவர் மின்னல் அம்ஜத் வெளியிட்ட அறிக்கையில், "தூத்துக்குடி மாவட்ட ஆட்சியாளர் அலுவலகத்துக்கு முன்பாக சாலை அமைக்கும் பணி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இந்த பணியில் கனரக வாகனங்கள் மூலமாக மணல் அள்ளும் போது அந்த பகுதியில் செல்லுகின்ற இரு சக்கர வாகன ஓட்டிகளுக்கு மிகுந்த அச்சுறுத்தலாக இருக்கிறது.  இதனால் விபத்து ஏற்படக்கூடிய அபாயம் உள்ளது. எனவே, கட்டுமானத்துக்கு பயன்படுத்தக்கூடிய வலைகளை அமைத்து பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார்.
Next Story