சந்தைப்பேட்டை பள்ளிவாசலில் மீலாது நபி கொண்டாட்டம்

சந்தைப்பேட்டை பள்ளிவாசலில் மீலாது நபி கொண்டாட்டம்
X
மீலாது நபி நிகழ்ச்சி
முகமது நபியின் பிறந்த நாளை முன்னிட்டு இன்று மீலாது நபி வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகின்றது. அந்த வகையில் சீவலப்பேரி அருகே உள்ள சந்தைப்பேட்டை ஜாமியா பள்ளிவாசலில் மீலாது நபி நிகழ்ச்சி கொண்டாடப்பட்டது. இதில் உலக நன்மைக்காக சிறப்பு துஆ செய்யப்பட்டது. தொடர்ந்து பொதுமக்களுக்கு நேர்ச்சை வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை ஜமாத் தலைவர் கோதர்ஷா தலைமையில் நிர்வாகிகள் செய்திருந்தனர். இதில் ஏராளமான இஸ்லாமியர்கள் கலந்து கொண்டனர்.
Next Story