முதலமைச்சர் கோப்பைக்கான நீச்சல் போட்டிகள்

X
குமரி மாவட்டம் நாகர்கோவில் அண்ணா விளையாட்டு மைதானத்தில் முதலமைச்சர் கோப்பைக்கான விளையாட்டுப் போட்டிகள் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த போட்டிகள் வரும் 8-ம் தேதி வரை நடைபெறுகிறது. நேற்று நீச்சல், வாலிபால், கால்பந்து, சிலம்பம்,கூடைப்பந்து ஆகிய போட்டிகள் நடந்தது. மேலும் பல போட்டிகள் பள்ளி கல்லூரி மைதானங்களில் நடந்து வருகிறது. இதில் மாவட்ட மண்டல அளவில் நடக்கும் போட்டிகளில் முதல் மூன்று இடங்கள் பிடிப்பவர்களுக்கு ரொக்க பரிசு வழங்கப்படுகிறது. மேலும் மாநில போட்டிகளுக்கும் அனுப்பி வைக்கப் படுவார்கள்.
Next Story

