கரூர் டூவீலரில் ஊர்வலமாக சென்று வஉசிக்கு வீரவணக்கம் செலுத்திய வெள்ளாளர் முன்னேற்றக் கழகத்தினர்.

கரூர் டூவீலரில் ஊர்வலமாக சென்று வஉசிக்கு வீரவணக்கம் செலுத்திய வெள்ளாளர் முன்னேற்றக் கழகத்தினர்.
கரூர் டூவீலரில் ஊர்வலமாக சென்று வஉசிக்கு வீரவணக்கம் செலுத்திய வெள்ளாளர் முன்னேற்றக் கழகத்தினர். சுதந்திர போராட்ட வீரரும் ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் அடக்குமுறைக்கு ஆளானவரும்.கப்பலோட்டிய தமிழருமாகிய வ உ சிதம்பரம் பிள்ளை அவர்களின் 154 ஆவது பிறந்த நாளை முன்னிட்டு வெள்ளாளர் முன்னேற்றக் கழகத்தின் மாவட்ட தலைவர் வினோத் தலைமையில் தாந்தோணி மலை பகுதியிலிருந்து 50க்கும் மேற்பட்ட டூவீலர்களில் சுங்க கேட், பசுபதிபாளையம், மார்க்கெட்,ஜவகர் பஜார்,பேருந்து நிலைய ரவுண்டானா பகுதிகளில் ஊர்வலமாக வந்து கரூர் - கோவை சாலையில் நிறுவப்பட்ட வ உ சிதம்பரனார் பிள்ளை திருவுருவப்படத்திற்கு மாலை அணிவித்து மலர்கள் தூவி கேக் வெட்டி புகழஞ்சலி செலுத்தினர். அப்போது அவரை வாழ்த்தி கோஷங்களையும் எழுப்பினர். இந்த நிகழ்ச்சியில் இந்த அமைப்பைச் சேர்ந்த 50-க்கும் மேற்பட்ட டூவீலர்களின் நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு பிறந்தநாள் விழாவை சிறப்பித்தனர்.
Next Story