துளசி கொடும்பில் ஸ்ரீ மாரியம்மன் கோவிலில் கும்பாபிஷேகம்.

துளசி கொடும்பில் ஸ்ரீ மாரியம்மன் கோவிலில் கும்பாபிஷேகம்.
துளசி கொடும்பில் ஸ்ரீ மாரியம்மன் கோவிலில் கும்பாபிஷேகம். கரூர் மாவட்டம் ஜெகதாபி ஊராட்சியில் துளசி கொடும்பு பகுதியில் அமர்ந்து அருள் பாலித்து வரும் ஸ்ரீ விநாயகர் ஸ்ரீ பாலமுருகன் ஸ்ரீ மாரியம்மன் ஸ்ரீ பாம்பாலம்மன் ஸ்ரீ பகவதி அம்மன் ஸ்ரீ முத்தாலம்மன் ஸ்ரீ கருப்பண்ணசாமி ஆகிய சுவாமிகள் உள்ள ஆலயம் புனரமைக்கப்பட்டு இன்று மகா கும்பாபிஷேக விழா நடைபெற்றது. கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு இன்று அதிகாலை மங்கல இசை உடன் இரண்டாம் கால பூஜை நடைபெற்றது. தொடர்ந்து பல்வேறு பூஜைகள் யாகசாலைகளில் நடத்தப்பட்டு பூஜிக்கப்பட்ட புனித நீரை கோவில் கோபுர கலசத்தில் சிவாச்சாரியார்கள் ஊற்றி கும்பாபிஷேக விழாவை வெகு விமர்சையாக நடத்தினார். இதனைத் தொடர்ந்து மகா தீபாதாரணையும் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் ஜெகதாபி சுற்றுவட்டார பகுதியைச் சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். விழாவில் பங்கேற்ற அனைவருக்கும் அன்னதானம் வழங்கினார்.
Next Story