ஹூப்பள்ளி - ராமநாதபுரம் வாராந்திர சிறப்பு ரயில்கள் கரூர் வழியாக இயக்கம்.
ஹூப்பள்ளி - ராமநாதபுரம் வாராந்திர சிறப்பு ரயில்கள் கரூர் வழியாக இயக்கம். சிறப்பு ரயில் இயக்கம் குறித்து கரூர் மாவட்டம் உள்ளடக்கிய சேலம் கோட்ட மக்கள் தொடர்பு அலுவலர் மரியா மைக்கேல் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் ரயில் எண்.07355 ஹூப்பள்ளி - ராமநாதபுரம் வாராந்திர சிறப்பு ரயில் 06.09.25 முதல் 27.09.2025 வரை சனிக்கிழமைகளில் 06.50 மணிக்கு ஹுப்பள்ளியிலிருந்து புறப்பட்டு ஞாயிற்றுக்கிழமைகளில் 05.00 மணிக்கு ராமநாதபுரத்தை சென்றடையும். ரயில் எண்.07356 ராமநாதபுரம் - ஹூப்பள்ளி வாராந்திர சிறப்பு ரயில் ராமநாதபுரத்தில் இருந்து 07.09.25 முதல் 28.09.25 வரை ஞாயிற்றுக்கிழமைகளில் 22.00 மணிக்குப் புறப்பட்டு திங்கள்கிழமைகளில் 19.40 மணிக்கு ஹுப்பள்ளியை சென்றடையும். இந்த ரயில் ஹாவேரி, ராணிபென்னூர், ஹரிஹர், தாவணகெரே, சிக்ஜாஜூர், பிரூர், அரசிகெரே, திப்தூர், தும்கூர், பானஸ்வாடி, ஓசூர், தர்மபுரி, சேலம், நாமக்கல், கரூர், திருச்சிராப்பள்ளி, புதுக்கோட்டை, காரைக்குடி, சிவகங்கை மற்றும் மானாமதுரை ரயில் நிலையங்களில் நின்று செல்லும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Next Story




