கிடப்பில் போடப்பட்ட நிழற்கூட பணிகள்

கிடப்பில் போடப்பட்ட நிழற்கூட பணிகள்
X
குமாரபாளையத்தில் நிழற்கூட பணிகள் கிடப்பில் போடப்பட்டுள்ளது.
குமாரபாளையம் கத்தேரி பிரிவு மேம்பாலம் பகுதியில் இருபுறமும் பொதுமக்கள் மழையில், வெயிலில் காத்திருந்து பேருந்தில் ஏறியும், இறங்கியும் வருகின்றனர். இதனால் குமாரபாளையம் கத்தேரி பிரிவு இருபுறமும் நிழற்கூடம் அமைக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்திருந்தனர். இதன்படி கோவை செல்லும் வழியில் உள்ள நிழற்கூடம் கட்டுமான பணிகள் கிடப்பில் போடப்பட்டுள்ளது. சேலம் செல்லும் பக்கமும் இதே போல் நிழற்கூடம் அமைக்க கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும் குமாரபாளையம் நகரில் ராஜம் தியேட்டர், ஆனங்கூர் பிரிவு, பள்ளிபாளையம் பிரிவு ஆகிய இடங்களில் நிழற்கூடம் இல்லாமல் உள்ளது. இங்கும் பெரும்பாலான பொதுமக்கள் மழையில், வெயிலில் காத்திருந்து பேருந்தில் ஏறியும், இறங்கியும் வருகின்றனர். பொதுமக்கள் நன்மையை கருத்தில் கொண்டு இந்த பகுதியிலும் நிழற்கூடம் அமைக்ககோரி, பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Next Story