கண் தானம் விழிப்புணர்வு பேரணி

கண் தானம் விழிப்புணர்வு பேரணி
X
தூத்துக்குடியில் அரவிந்த கண் மருத்துவமனை சார்பில் கண் தானம் குறித்த விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.
தூத்துக்குடியில் அரவிந்த கண் மருத்துவமனை சார்பில் கண் தானம் குறித்த விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. பேரணியை மத்திய அரசு நோட்டரி பப்ளிக், தமிழக அரசு விதவை & ஆதரவற்ற பெண்கள் நலவாரிய மாநில உறுப்பினர் வழக்கறிஞர் எஸ். சொர்ணலதா துவக்கி வைத்தார். பேரணி, எஸ்.ஏ.வி பள்ளியில் இருந்து துவங்கி காந்தி சிலை வழியாக மீண்டும் எஸ்.ஏ.வி பள்ளியிலேயே நிறைவடைந்தது.  எஸ்.ஏ.வி பள்ளி மாணவர்கள் மற்றும் அரவிந்த கண் மருத்துவமனை பணியாளர்கள் கலந்து கொண்டு, "கண் தானம் – வாழ்க்கை தானம்” என்ற முழக்கங்களை எழுப்பி, பல்வேறு வாசக பலகைகள் மூலம் விழிப்புணர்வை பரப்பினர். பேரணியின்போது மக்களிடம் விழிப்புணர்வு பிரசுரங்கள் வழங்கப்பட்டன. கண் தானம் மூலம் தேவையற்ற  பார்வை இழப்பை ஒழிக்கலாம் என பொதுமக்கள் அனைவரும் கண் தானத்தில் பங்கேற்குமாறு அழைப்பு விடுக்கப்பட்டது.
Next Story