நோயாளிகள் வசம் குறைகள் கேட்ட நகராட்சி தலைவர்

X
Komarapalayam King 24x7 |5 Sept 2025 2:25 PM ISTகுமாரபாளையம் அரசு மருத்துவமனையில் நோயாளிகள் வசம் குறைகள் குறித்து நகராட்சி தலைவர் கேட்டறிந்தார்.
குமாரபாளையம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் உள் நோயாளிகளிடம் மருத்துவமனையில் வழங்கப்பட்டு வரும் சிகிச்சைகள் குறித்தும் மற்றும் நோயாளிகளின் குறைகள் குறித்தும் நகராட்சி தலைவர் , வடக்கு நகர தி.மு.க. பொறுப்பாளர் விஜய்கண்ணன் கேட்டறிந்தார். மேலும் மருத்துவமனையில் பொது மக்களின் வசதிக்காக கட்டப்படும் கழிப்பிட கட்டிடப் பணிகளை பார்வையிட்டு தாமதமின்றி பணிகளை முடிக்குமாறு ஒப்பந்ததாரருக்கு அறிவுறுத்தினார்கள். தலைமை மருத்துவ அலுவலர் .பாரதி, நகர பொறுப்புக்குழு உறுப்பினர் ராஜ்குமார், ராஜ்குமார், நகர இளைஞரணி அமைப்பாளர் விக்னேஷ், மாவட்ட மாணவரணி துணை அமைப்பாளர் ஐயப்பன் மற்றும் பலர் பங்கேற்றனர்.
Next Story
