அரசு உதவி பெறும் பள்ளியில் ஆசிரியர் தின விழா

அரசு உதவி பெறும் பள்ளியில் ஆசிரியர் தின விழா
X
குமாரபாளையம் சி.எஸ்.ஐ. அரசு உதவி பெறும் நடுநிலைப் பள்ளியில் ஆசிரியர் தினம் மற்றும் வ.உ. சிதம்பரனார் பிறந்த நாள் விழா நடந்தது.
குமாரபாளையம் சி.எஸ்.ஐ. அரசு உதவி பெறும் நடுநிலைப் பள்ளியில் முன்னாள் ஜனாதிபதி ராதாகிருஷ்ணன் நினைவாக ஆசிரியர் தினம் மற்றும் வ.உ. சிதம்பரனார் பிறந்த நாள் விழா விடியல் ஆரம்பம் சார்பாக நடந்தது. தலைமை ஆசிரியர் சுகந்தி தலைமை வகித்தார். தாளாளர் லெவி முன்னிலை வகித்தார். முன்னாள் ஜனாதிபதி ராதாகிருஷ்ணன், வ.உ. சிதம்பரனார் ஆகிய இருவர் திருவுருவப்படத்திற்கு மலர்மாலைகள் அணிவிக்கப்பட்டு மரியாதை செலுத்தப்பட்டது. பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டன. பள்ளி மாணவ மாணவிகளுக்கு, பேச்சுப்போட்டி, மாறுவேடப் போட்டி, கட்டுரை போட்டி, நடன போட்டிகள், நடத்தப்பட்டு வெற்றி பெற்ற மாணவர்களுக்கு விடியல் பிரகாஷ் புத்தகங்களை வழங்கினார். ஆசிரியர் தினத்தை முன்னிட்டு தலைமையாசிரியர் மற்றும் அனைத்து ஆசிரியர்களுக்கும் பொன்னாடை அணிவித்து பரிசுகள் அனைத்து வணிகர் சங்க தலைவர் காமராஜர் வழங்கினார். சுகந்தி தலைமையாசிரியர் மற்றும் ஆசிரியர்கள் ஜாய்ஸ் அருள்செல்வி, ஸ்டெல்லா, மெர்சிபா குளோரி, ஹெலன் பிரிசில்லா,ஒய்வு பெற்ற ஆசிரியர் செல்வி ஆகியோருக்கு பொன்னாடைகள் மற்றும் பரிசுகள் வழங்கப்பட்டது. இதில் பாஸ்டர் மணி,கெத்சியா மெர்லின், ஜமுனா, ராணி, தீனா, அன்புராஜ், மற்றும் பெற்றோர்கள் பங்கேற்றனர்.
Next Story