நாமக்கல் செங்கழுநீர் பிள்ளையார் கோயில் கும்பாபிஷேக விழா!

செங்கழுநீர் பிள்ளையார் கோயில் கோபுரத்திற்கு சிவாச்சாரியார்கள் வேத மந்திரம் முழங்க புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் வெகு விமர்சையாக நடைபெற்றது.
நாமக்கல் - கடைவீதி பிரதான சாலையில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற செங்கழுநீர் பிள்ளையார் கோயில் கும்பாபிஷேக விழா சிறப்பாக நடைபெற்றது.கிராம சாந்தியுடன் தொடங்கி பல்வேறு பூஜைகள் நடைபெற்றன. செங்கழுநீர் பிள்ளையார் கோபுரத்திற்கு சிவாச்சாரியார்கள் வேத மந்திரம் முழங்க புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் வெகு விமர்சையாக நடத்தப்பட்டது.நாமக்கல் சட்டமன்ற உறுப்பினர் ராமலிங்கம் எம்எல்ஏ, மாநகராட்சி மேயர் கலாநிதி மற்றும் நாமக்கல் சாரா குரூப்ஸ் குழுமத்தின் நிறுவனர் ஸ்ரீ தேவி மோகன் மற்றும் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
Next Story