அதிமுக பொது செயலாளர் எடப்பாடி கட்சியில் அனைவரையும் ஒருங்கிணைக்கவில்லை என்றால், அதிமுக பிளவுபட்டு இரு அணியாகப் பிரிந்து தேர்தலில் வாக்கு சேகரிக்கப்படும்,

X
அதிமுக பொது செயலாளர் எடப்பாடி கட்சியில் அனைவரையும் ஒருங்கிணைக்கவில்லை என்றால், அதிமுக பிளவுபட்டு இரு அணியாகப் பிரிந்து தேர்தலில் வாக்கு சேகரிக்கப்படும், இது திமுகவுக்கு சாதகமாக அமையும் பெரம்பலூரில் முன்னாள் குன்னம் சட்டமன்ற உறுப்பினர் அதிமுக மாவட்ட செயலாளருமான ஆர்டி இராமச்சந்திரன் பெரம்பலூரில் பேட்டி. அதிமுக கட்சியில் பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமி இருந்தாலும், கட்சியின் இரண்டாம் நிலை நிர்வாகிகள் தங்களது பல்வேறு கருத்துக்களை சொல்லி வருவதால், கட்சியில் பல்வேறு கட்ட குளறுபடிகள் குழப்பங்கள் நிலவி வருகிறது, இந்நிலையில் செங்கோட்டையன் தற்போது அதிமுகவில் பிரிந்துள்ள அனைத்து நிர்வாகிகள் தொண்டர்களும் எந்த நிர்பந்தமும் இல்லாமல் கட்சியில் ஒன்றாக ஒருங்கிணைக்க வேண்டும் இதை நான் பொதுமக்கள், தொண்டரின் குரலாக கூறுகிறேன் என வெளியிட்டுள்ள பேட்டியை தொடர்ந்து பல்வேறு அதிமுக தலைமை நிர்வாகிகள் கட்சியில் இருந்து தனித்து செயல்பட வாய்ப்பு உள்ளதாக தெரியவரும் நிலையில், பெரம்பலூர் மாவட்ட அதிமுக முன்னாள் குன்னம் சட்டமன்ற உறுப்பினரும் மாவட்ட செயலாளருமான ஆர்.டி. இராமச்சந்திரன், ஓபிஎஸ் அணியில் இருப்பதால் அங்கு அவருக்கு அம்மா பேரவை செயலாளர் பொறுப்பு தரப்பட்டுள்ளது இந்நிலையில் இன்று செய்தியாளர்கள் சந்தித்த அவர், அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் வெளியிட்டுள்ள அறிக்கையை தொடர்ந்து அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களை ஒருங்கிணைத்து செயல்பட வேண்டும் இதனை அனைவரும் வரவேற்கிறோம், அவ்வாறு இல்லாமல் நான் தான் என்று தனித்து செயல்பட்டால், கட்சி பிளவுபட்டு இரண்டாகிவிடும் இதில், ஓபிஎஸ் ஆலோசனைப்படி, பெரம்பலூர் மற்றும் குன்னம் ஆகிய இரண்டு தொகுதிகளிலும் தனியாக போட்டியிட்டு வாக்கு சேகரிக்கப்படும் இது திமுகவுக்கு சாதகமாக இருக்கும் எனவே இதை கருத்தில் கொண்டு எடப்பாடி பழனிச்சாமி நடக்க வேண்டும், இது பெரம்பலூர் மட்டுமல்லாமல் அனைத்து மாவட்டத்தி ற்கும் இந்த நிலைமை கொண்டு வர வேண்டுமென ஓபிஎஸ் மற்றும் வைத்திலிங்கம் அவர்களுக்கு வலியுறுத்துவதாகவும் தெரிவித்தார், பெரம்பலூர் மாவட்டத்தை பொருத்தவரை அதிமுக கட்சி ஒருங்கிணைப்பு இல்லை என்றால் தான் குன்னம் சட்டமன்ற தொகுதியிலும் தனது சார்பாக பெரம்பலூர் சட்டமன்ற தொகுதியிலும் தனியாக அதிமுக திமுகவை எதிர்த்து சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடப் போவதாக தெரிவித்தார்.
Next Story

