கிட்னி திருட்டை கண்டித்து ஆர்ப்பாட்டம் - அதிமுக ஆலோசனை

கிட்னி திருட்டை கண்டித்து ஆர்ப்பாட்டம் - அதிமுக ஆலோசனை
X
செவ்வாய்க்கிழமை திமுக அரசை கண்டித்து சமயபுரம் நால்ரோடு அருகில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது
அதிமுக பொதுச் செயலாளர், எடப்பாடி பழனிச்சாமி ஆணைக்கிணங்க மண்ணச்சநல்லூர் சட்டமன்ற உறுப்பினருக்கு சொந்தமான பெரம்பலூர் தனலெட்சுமி ஸ்ரீனிவாசன் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் நடைபெற்ற கிட்னி திருட்டில் சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்காத தி.மு.க. அரசை கண்டித்து திருச்சி புறநகர் வடக்கு மாவட்ட கழகத்தின் சார்பில் 09.09.2025 செவ்வாய்க்கிழமை சமயபுரம் நால்ரோடு எம்.ஜி.ஆர் சிலை அருகில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் கழக மகளிர் அணி செயலாளரும், கழக செய்தி தொடர்பாளரும், முன்னாள் அமைச்சருமான பா.வளர்மதி தலைமையிலும் திருச்சி புறநகர் வடக்கு மாவட்ட கழக செயலாளரும் முன்னாள் அமைச்சருமான பரஞ்ஜோதி முன்னிலையிலும் நடைபெறுகிறது. இதனை முன்னிட்டு திருச்சி தில்லை நகரில் உள்ள புறநகர் வடக்கு மாவட்ட கழக அலுவலகத்தில் மாவட்ட, ஒன்றிய, பகுதி, நகர, பேரூர் கழக செயலாளர்கள் சார்பு அணி செயலாளர்கள் ஆலோசனை கூட்டம் மாவட்ட செயலாளர் பரஞ்சோதி தலைமையில் இன்று நடைபெற்றது கூட்டத்தில் கண்டன ஆர்ப்பாட்டத்தில் கழக நிர்வாகிகள். தொண்டர்கள், மகளிர் அணியினர் திறளாக கலந்து கொள்வது என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்த ஆலோசனை கூட்டத்தில் கழக அமைப்பு செயலாளர் எஸ்.வளர்மதி, முன்னாள் அரசு தலைமை கொறடா மனோகரன், முன்னாள் அமைச்சர் சிவபதி, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் இந்திராகாந்தி உள்ளிட்ட கழக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்
Next Story