எல்லைப்பட்டி-டூவீலர் மீது கார் மோதி விபத்து. ஒருவர் படுகாயம்.

எல்லைப்பட்டி-டூவீலர் மீது கார் மோதி விபத்து. ஒருவர் படுகாயம்.
எல்லைப்பட்டி-டூவீலர் மீது கார் மோதி விபத்து. ஒருவர் படுகாயம். கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி தாலுகா சௌந்தராபுரம் சிஎஸ்ஐ சர்ச் அருகே வசித்து வருபவர் ஞானசேகர் வயது 59. இவர் திங்கள் கிழமை காலை 9:15 மணி அளவில் எரமநாயக்கனூர் - சொக்கலாபுரம் சாலையில் டூவீலரில் சென்றார். அப்போது அப்பகுதியில் உள்ள எல்லப்பட்டி நால்ரோடு அருகே வந்தபோது அருகிலுள்ள மண்மாரி பகுதியைச் சேர்ந்த ஆனந்த் பாபு என்பவர் வேகமாக ஓட்டி வந்த கார் ஞானசேகர் ஓட்டி சென்ற டூவீலரின் மீது மோதி விபத்து ஏற்பட்டது. இதில் பலத்த காயம் அடைந்த ஞானசேகரை கோவையில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். இந்த சம்பவம் அறிந்த ஞானசேகரின் உறவினர் சம்பத் ராஜா அளித்த புகாரில் அரவக்குறிச்சி காவல்துறையினர் விபத்து ஏற்படுத்திய ஆனந்த்பாபு மீது வழக்கு பதிவு செய்துள்ளனர்.
Next Story