வடக்கு காந்திகிராமம் முதுகு தண்டுவட பிரச்சனையால் தூக்கிட்டு தற்கொலை செய்த வாலிபர்.
வடக்கு காந்திகிராமம் முதுகு தண்டுவட பிரச்சனையால் தூக்கிட்டு தற்கொலை செய்த வாலிபர். கரூர் வடக்கு காந்திகிராமம் பாரதியார் நகர் 2வது கிராஸ்பகுதியைச் சேர்ந்தவர் குணசீலன் வயது 34. இவர் கடந்த 4- வருடங்களுக்கு முன்பு சரண்யா வயது 25 என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு 11 மாதத்தில் ஒரு பெண்குழந்தை உள்ளது. இந்நிலையில் கடந்த சில மாதங்களாக குணசீலனுக்கு முதுகு தண்டுவடத்தில் பிரச்சனை ஏற்பட்டது.இதற்காக சிகிச்சை மேற்கொண்டும் அவருக்கு குணமாகவில்லை. இதனால் விரக்தி அடைந்த குணசீலன் வியாழக்கிழமை காலை 11.30 மணி அளவில் அவரது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் அறிந்த அவரது மனைவி சரண்யா அளித்த புகாரில் பசுபதிபாளையம் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
Next Story




