முன்னாள் முதல்வர் வருகை குறித்த ஆலோசனை கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் தங்கமணி பங்கேற்றார்.

X
Komarapalayam King 24x7 |5 Sept 2025 5:01 PM ISTகுமாரபாளையத்தில் நடந்த முன்னாள் முதல்வர் வருகை குறித்த ஆலோசனை கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் தங்கமணி பங்கேற்றார்.
குமாரபாளையம் சட்டமன்ற உறுப்பினர் மற்றும் அ.தி.மு.க.வின் கழக அமைப்புச் செயலாளருமான தங்கமணி குமாரபாளையம் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்திற்கு வந்தார். அப்பொழுது அவரை பார்ப்பதற்காக முக்கிய நிர்வாகிகள் குவிந்தனர். நாமக்கல் மாவட்டத்திற்கு வருகை தரும் முன்னாள் முதல்வர் இடைப்பாடி பழனிச்சாமி நிகழ்ச்சி ஏற்பாடுகள், வரவேற்பு குறித்து ஆலோசிக்கப்பட்டது. இதனையடுத்து முன்னாள் அமைச்சர் தங்கமணி கட்சி நிர்வாகிகளிடம் கலந்து ஆலோசித்து விட்டு வெளியில் வந்த பொழுது முன்னாள் அமைச்சர் தங்கமணியிடம் பத்திரிகையாளர்கள் முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் பேட்டி குறித்து உங்கள் கருத்து என்ன? என கேட்டதற்கு, நான் இன்று தொலைக்காட்சி பார்க்கவில்லை. பேட்டி என்ன கொடுத்துள்ளார், என பார்த்துவிட்டு பேட்டி அளிப்பதாக பத்திரிக்கையாளர் கேள்விகளுக்கு பதில் அளிக்காமல் வேகமாக தனது காரில் ஏறி சென்றார்.
Next Story
