டிப்பர் லாரி மீது கார் மோதி விபத்து, ஒருவர் உயிரிழப்பு

X
மதுராந்தகம் அருகே அதிகாலையில் சாலையோரம் நின்று கொண்டிருந்த டிப்பர் லாரி மீது கார் மோதி விபத்து ஒருவர் உயிரிழப்பு தஞ்சாவூரில் இருந்து சென்னை நோக்கி திருச்சி சென்னை தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்த கார் செங்கல்பட்டு மாவட்டம்,மதுராந்தகம் அடுத்த மேலவலம்பேட்டை என்ற இடத்தில் சாலையோரம் நின்று கொண்டிருந்த டிப்பர் லாரி பின்பக்கத்தில் கார் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் காரில் பயணம் செய்த டெல்வின் என்பவர் சம்பவ இடத்தில் உயிரிழந்தார். மேலும் காரில் பயணம் செய்த லோகேந்திரன் நரேஷ் நிக்சன் ஆகிய மூன்று பேர் படுகாயங்களுடன் செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மேலும் இந்த விபத்து குறித்து மதுராந்தகம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணையானது மேற்கொண்டு வருகின்றனர்.
Next Story

