கோவை: மலைப்பாதையில் காட்டெருமைகள் - வனத்துறை எச்சரிக்கை !

X
வால்பாறை மலைப்பகுதியில் சாலைகளிலும் தேயிலை தோட்டங்களிலும் காட்டெருமைகள் அதிகமாக உலா வருகின்றன. இதனால் மனித-வனவிலங்கு மோதல் ஏற்படும் அபாயம் அதிகரித்து வருவதாக வனத்துறையினர் தெரிவித்துள்ளனர். காட்டெருமைகள் புல்லை தேடி கூட்டமாக சாலைகளை கடக்கின்றன. இதனால் சுற்றுலா பயணிகளின் வாகனங்கள் வழிமறியப்படுகின்றன. அப்போது புகைப்படம் எடுப்பது, செல்பி எடுப்பது, ஹாரன் அடிப்பது போன்ற செயல்களில் ஈடுபடக்கூடாது எனவும், இது தாக்குதலுக்கு வழிவகுக்கக்கூடும் எனவும் வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
Next Story

