ராமநாதபுரம் முன்னாள் மாணவர்கள் ஆசிரியர் தின விழா கொண்டாட்டம் நடைபெற்றது

ஆசிரியர் தினத்தை போற்றும் வகையில் முன்னாள் மாணவர்கள் ஒன்றிணைந்து தாங்கள் படித்த பள்ளிக்கு ரூ 20 லட்சம் மதிப்பிலான கலையரங்கம் கட்டி கொடுத்து அசத்தியுள்ளனர் ஆசிரியர்கள் நெகிழ்ச்சி பெருமிதம்
ராமநாதபுரம் மாவட்டம் நகர் பகுதியில் அமைந்துள்ள லூயிஸ் லெவல் மெட்ரிக் பள்ளியில் 25 ஆண்டுகளுக்கு முன்னால் பயின்ற மாணவ மாணவியர்கள் தாங்கள் பயின்ற பள்ளிக்கு ரூ 20 லட்சம் மதிப்புள்ள ஆடிட்டோரியம் (கலையரங்கம்) கட்டிக் கொடுத்துள்ளனர். ஆசிரியர் தினத்தை போற்றும் வகையில் லூயிஸ் லெவல் மெட்ரிக் பள்ளியில் பயின்ற மாணவ மாணவிகள் 25 ஆண்டுகளுக்கு பிறகு கடந்த வருடம் அனைவரும் ஒன்று கூடி சந்திப்பு நிகழ்ச்சி ஒன்றை நடத்தினர். அதற்குப் பிறகு தனியாக whatsapp குரூப் ஒன்று ஆரம்பிக்கப்பட்டு அதில் தகவல்கள் பரிமாற பட்டு தாங்கள் பயின்ற பள்ளிக்கு ஏதாவது ஒன்று செய்ய வேண்டும் என்று அனைவரும் முடிவெடுத்து பள்ளியில் பயின்ற மாணவ மாணவியர்கள் அனைவரும் ஒன்றிணைந்து 20 லட்சம் மதிப்புள்ள auditorium கலையரங்கத்தை தாங்கள் பயின்ற பள்ளிக்கு ஆசிரியர் தினத்தை முன்னிட்டு கட்டி கொடுத்து தங்களது நன்றியை வெளிக்காட்டி உள்ளனர் அதனை அருட் பங்குத்தந்தை சிங்கராயர் மற்றும் அருட் சகோதரி தனமேரி ஆகியோர்கள் ரிப்பன் வெட்டி திறந்து வைத்து நெகிழ்ச்சி அடைந்தனர் பின்னர் குத்துவிளக்கேற்றி விழாவினை துவக்கி வைத்தனர். முன்னால் பயின்ற மாணவர்கள் தாங்கள் மற்றும் தங்கள் குடும்பத்தினருடன் வருந்திருந்தனர் அவர்கள் ஒவ்வொருவராக மேடையில் தாங்கள் பயின்ற விதம் தற்போது என்ன பணி செய்து கொண்டிருக்கிறோம் என பழைய கால நினைவுகளை மாணவர்கள் மற்றும் நண்பர்களுடன் பகிர்ந்து கொண்டனர். மேலும் தாங்கள் பள்ளிக்கு செய்தது போல ஒவ்வொரு மாணவ மாணவிகளும் தாங்கள் பயின்ற பள்ளிக்கு ஏதாவது ஒன்று செய்ய வேண்டும் என கேட்டுக்கொண்டனர். விழாவின் தொடக்கத்தில் ஆசிரியர் தினமான நேற்று பழைய மாணவர்கள் தங்களுக்கு கல்வி கற்றுக் கொடுத்த ஆசிரியர் பெருமக்களுக்கும் ரோஜாப்பூ கொடுத்து வாழ்த்து தெரிவித்து ஆசி பெற்றனர்...
Next Story