சொர்ண லிங்கேஸ்வரருக்கு பிரதோஷ சிறப்பு அலங்காரம்..

சொர்ண லிங்கேஸ்வரருக்கு பிரதோஷ சிறப்பு அலங்காரம்..
X
சொர்ண லிங்கேஸ்வரருக்கு பிரதோஷ சிறப்பு அலங்காரம்..
நாமக்கல் மாவட்டம் இராசிபுரம் காந்தி சாலை பட்டணம் ரோட்டில் அமைந்துள்ள அரச மரத்து ஸ்ரீ சக்தி விநாயகர் திருக்கோயில் ஸ்வர்ணலிங்கேஸ்வரர் சுவாமிக்கு இன்று பிரதோஷம் முன்னிட்டு சிறப்பு பூஜை நடைபெற்றது. முன்னதாக பால், தயிர், மஞ்சள், சந்தனம், தேன், பஞ்சாமிர்தம் தயிர்,திருமஞ்சனம், பன்னீர்,அரிசிமாவு, திருநீறு , போன்ற பல்வேறு வாசனை திரவியங்களால் அபிஷேகம், மற்றும் சொர்ணாபிஷேகம் செய்யப்பட்டு மலர்களால் அலங்காரம் செய்து மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர் .இந்த சிறப்பு அலங்காரத்தை கோவில் அர்ச்சகர் பெருமாள் செய்திருந்தனர். தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
Next Story