முதலமைச்சர் மகளிர் காண விளையாட்டு போட்டி

மாணவிகளுக்கான பல்வேறு விளையாட்டு போட்டிகள் நடைபெற்றது. குறிப்பாக கல்லூரி மாணவ மாணவிகளுக்கான, தடகள விளையாட்டுகள், ஓட்டம், தட்டு எரிதல், மற்றும் இறகு பந்து, கபாடி, கேரம் மற்றும் கிரிக்கெட் உள்ளிட்ட விளையாட்டு போட்டிகள்  நடைபெற்றது. இந்த போட்டிகளில் முதல் மூன்று இடங்களில் வெற்றி
பெரம்பலூரில் புரட்சித் தலைவர் எம்ஜிஆர் விளையாட்டு அரங்கில் மாவட்ட அளவிலான முதலமைச்சர் கோப்பைக்கான விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றது. தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் சார்பில் பெரம்பலூர் மாவட்ட விளையாட்டு மைதானத்தில் முதலமைச்சர் கோப்பைக்கான விளையாட்டுப் போட்டிகள் கடந்த 26 ஆம் தேதி முதல் நடைபெற்ற வருகிறது. அந்த வகையில் இன்று மாணவிகளுக்கான பல்வேறு விளையாட்டு போட்டிகள் நடைபெற்றது. குறிப்பாக கல்லூரி மாணவ மாணவிகளுக்கான, தடகள விளையாட்டுகள், ஓட்டம், தட்டு எரிதல், மற்றும் இறகு பந்து, கபாடி, கேரம் மற்றும் கிரிக்கெட் உள்ளிட்ட விளையாட்டு போட்டிகள்  நடைபெற்றது. இந்த போட்டிகளில் முதல் மூன்று இடங்களில் வெற்றி பெறுபவர்களுக்கு அனைத்து போட்டிகளும் முடிவுற்ற பிறகு  பரிசு வழங்கப்படுவதோடு, அவர்கள் மாநில அளவிலான போட்டிகளுக்கு தகுதி பெறுவர்  என்பது குறிப்பிடத்தக்கது. இன்று நடைபெற்ற விளையாட்டுப் போட்டிகளில் 450 க்கும் மேற்பட்ட கல்லூரி மாணவிகள் கலந்து கொண்டு ஆர்வத்துடன் விளையாடினார்கள்.
Next Story