மீலாது நபி முன்னிட்டு சுன்னத் ஜமாத் பேரியக்கத்தின் சார்பில் ஊர்வலம்

இறைத்துாதர் நபிகள் நாயகத்தின் பிறந்த நாள் விழாவாக இன்று அனைத்து நாடுகளிலும் கொண்டாடப்படுகிறது இதையொட்டி, பெரம்பலுர் மாவட்டம் வேப்பந்தட்டை வட்டம் வி. களத்துர் சுன்னத் ஜமாஅத் பேரியக்கத்தின் கிளை சார்பில் இன்று வி. களத்துரில் நபிகள் புகழ் பாடும் பேரணி நடைபெற்றது. இதில் சுன்னத் ஜமாஅத் பேரியக்கத்தின்
வி.களத்தூரில் மீலாது நபி முன்னிட்டு சுன்னத் ஜமாத் பேரியக்கத்தின் சார்பில் ஊர்வலம் நடைபெற்றது .இறைத்துாதர் நபிகள் நாயகத்தின் பிறந்த நாள் விழாவாக இன்று அனைத்து நாடுகளிலும் கொண்டாடப்படுகிறது இதையொட்டி, பெரம்பலுர் மாவட்டம் வேப்பந்தட்டை வட்டம் வி. களத்துர் சுன்னத் ஜமாஅத் பேரியக்கத்தின் கிளை சார்பில் இன்று வி. களத்துரில் நபிகள் புகழ் பாடும் பேரணி நடைபெற்றது. இதில் சுன்னத் ஜமாஅத் பேரியக்கத்தின் தலைவர் முஹம்மது ஆஜம் ஹஜரத் தலைமை வகித்தார். சுன்னத் ஜமாஅத் பேரியக்கத்தின் கௌரவ தலைவர்கள் பஷீர் அஹமத், லியாகத் அலி உள்ளிட்ட நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர். வி களத்தூர் ஜமாத் தலைவர் ஹயாத் பாஷா மற்றும் ஜமாத் நிர்வாகிகள் ஆகியோர் பேரணியைத் துவக்கி வைத்தனர் இதில் சுன்னத் ஜமாஅத் பேரியக்கத்தின் செயலாளர் அஹம்மது பாஷா ஸாபிரி, அர்ஸ்சத் அலி உள்ளிட்ட பேரியக்கத்தின் நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் ஏராளமான சிறுவர்கள், ஆண்கள் பெண்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்ட நபிகள் புகழ் பாடும் ஊர்வலம் மாலை சுமார் 5 மணிக்கு ஜாமியா பள்ளி வாசலில் துவங்கியது. பல்வேறு முக்கிய வீதிகள் ஆன தெற்கு தெரு. நடுத்தெரு. வடக்கு சின்ன தெரு. கடை வீதி வழியாக சுன்னத் ஜமாஅத் பேரியக்கத்தின் கிளை அலுவலகத்தில் வந்தடைந்தது இதனை தொடர்ந்து சென்னை ஊரப்பாக்கம் மஸ்ஜித் இ அக்ஸா தலைமை இமாம் M. K அபூபக்கர் சித்தீக் உஸ்மானி அவர்கள் நபிகளாரை பற்றி உரை நிகழ்த்தி விளையாட்டுப் போட்டியில் கலந்து கொண்டு வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டு இறுதியாக நன்றியுரை உடன் நிகழ்ச்சி நிறைவு பெற்று
Next Story