ஆதிபராசக்தி மன்றத்தினர் கஞ்சிக்கலை ஊர்வலம்

X
தாராபுரம் மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி வழிபாட்டு மன்றத்தின் சார்பில் நோய் நொடிகள் பரவாமல் இருக்க வேப்பிலையால் புனித நீர் தெளித்தவாறு கஞ்சி கலயங்களுடன் ஊர்வலமாக பக்தி பரவசத்துடன் சென்றனர். தாராபுரம் மாரியம்மன் கோவில் வளாகத்தில் இருந்து பங்காரு அடிகளாரின் உருவப்படத்துடன் கஞ்சி கலயங்களை தலையில் சுமந்தவாறு பக்தி கோஷம் முழங்க ஊர் வலமாக புறப்பட்டனர். பழைய போலீஸ் நிலைய சாலை, பெரிய கடைவீதி, பூக்கடை சந்திப்பு, வசந்தா சாலை வழியாக சுந்தரம் குடித்தெருவில் உள்ள ஆதிபராசக்தி கோவிலை அடைந்தனர். ஊர்வலத்தில் செவ்வாடை அணிந்த திரளான பெண்கள் கலந்து கொண்டனர். கோவிலில் சிறப்பு பூஜைகள் முடிந்த பின் அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது
Next Story

