ஆலங்குளத்தில் கள்ள நோட்டு புழக்கத்தில் விட்டவர் கைது

X
தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே அடைக்கலபட்டினம் அழகாபுரியை சேர்ந்தவர் மணிகண்ட பிரபு (25) இவர் வீட்டில் கலர் பிரிண்டிங் இயந்திரத்தில் வைத்து கள்ள நோட்டு அச்சடித்து புழக்கத்தில் விட்டதாக ஆலங்குளம் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதன் பேரில் ஆலங்குளம் காவல் ஆய்வாளர் சுரேஷ்குமார் மற்றும் போலீசார் அங்கு சென்று ஆய்வு மேற்கொண்டு அவரை கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்து 30 கள்ள நோட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன ஆலங்குளம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.
Next Story

