ஆயுத பூஜை விழா நடத்த கண்டன ஆர்ப்பாட்டம்

X
தமிழ்நாடு அரசு போக்குவரத்து சழகம் சார்பில் இயங்கும் டெப்போக்களில் ஆயுத கூடங்களில் சுமார் 60 ஆண்டு காலமாக ஆயுத பூஜை விழா நடத்தப்பட்டு வருகிறது. இந்த விழா ஒவ்வொரு தொழிலாளர்களின் சம்பளத்தில் இருந்து பிடித்தம் செய்யப்படும் ரூபாயில் ஆயுத பூஜை விழா நடத்தப்படுகிறது. இந்த விழா இவ்வாண்டு நடத்தப்படுவதற்கான ஆயத்த பணிகள் இன்னும் துவங்கப்படவில்லை. ஆகவே ஆயுத பூஜை விழா நடத்தப்படுவது இல்லை என்பது தெழிவாக தெரிகிறது. ஆண்டாண்டு காலம் நடத்தப்படும் இந்த விழா இவ்வாண்டும் வழக்கப்போல் நடத்த வலியுறுத்தி பி. எம்.எஸ். சார்பில் நேற்று படந்தாலுமுடு டெப்போ முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் பி. எம்.எஸ். குழித்துறை பணிமனை தலைவர் ஜெகனாதராஜ் தலைமை வகித்தார். வரதராஜ், ஜெஸ்டின் அருள் முன்னிலை வகித்தனர். சுப்பிரமணிய சிவா வரவேற்றார். பி.எம்.எஸ்-ன் மாவட்ட தலைவர் ஜெயபால், மாவட்ட அமைப்பாளர் நடேசன், மாவட்ட பொருளாளர் ஜெயக்குமார் உள்ளிட்டோர் பேசினர். இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் பி. எம். எஸ்.-ன் நிர்வாகிகள், உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். ராஜேஷ் நன்றி கூறினார்.
Next Story

