ஆசிரியர் தின விழா: கீரீடம் சூட்டி மரியாதை செய்த மாணவிகள்

ஆசிரியர் தின விழா: கீரீடம் சூட்டி மரியாதை செய்த மாணவிகள்
X
கோவில்பட்டி அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் நடந்த ஆசிரியர் தின விழாவில் பள்ளி மாணவிகள் ஆசிரியர்களுக்கு கிரீடம் சூட்டி மரியாதை செலுத்தினர்.
நாடு முழுவதும் செப்டம்பர் 5ம் தேதி முன்னாள் குடியரசுத் தலைவர் ராதாகிருஷ்ணனின் பிறந்த தினத்தை ஆசிரியர் தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இதையொட்டி கோவில்பட்டி அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு கோவில்பட்டி ரோட்டரி சங்க தலைவர் ராஜ்குமார் தலைமை வகித்தார். மாவட்ட முன்னாள் துணை ஆளுநர்கள் முத்துச்செல்வம், ஆசியா பார்ம்ஸ் பாபு ஆகியோர் முன்னிலை வகித்தனர். பள்ளி உதவி தலைமையாசிரியை கிரேனா அனைவரையும் வரவேற்றார். இதில் பள்ளி தலைமை ஆசிரியை ஜெயலதாவுக்கு ரோட்டரியின் மதிப்புமிகு தலைமை ஆசிரியர் விருதினை ரோட்டரி மாவட்ட துணை ஆளுநர் பரமேஸ்வரன் வழங்கி பாராட்டி பேசினார். இதில் ஆசிரியர்களுக்கு பள்ளி மாணவிகள் கிரீடம் சூட்டி மரியாதை செய்தனர். இதில் ரோட்டரி சங்க நிர்வாகிகள் முத்து முருகன், தாமோதரக் கண்ணன், மணிகண்டன், பள்ளி உதவி தலைமை ஆசிரியர் கண்ணன் உள்பட ஆசிரியர்கள் மாணவிகள் பலர் கலந்து கொண்டனர். நிறைவாக இசை ஆசிரியை அமல புஷ்பம் நன்றி கூறினார்.
Next Story