தூத்துக்குடி துறைமுக வாயிலை முற்றுகையிட்ட மக்கள்

X
தூத்துக்குடி வஉசி துறைமுகத்தை ஒவ்வொரு வருடமும் வ.உ. சிதம்பரனார் பிறந்த நாளன்று (செப். 5) பொதுமக்கள் இலவசமாக பார்வையிட அனுமதி வழங்கப்படும். இதன் காரணமாக நேற்று ஏராளமான பொதுமக்கள் துறைமுகத்தை பார்வையிட வந்தனர். ஆனால் மத்திய கப்பல் போக்குவரத்து அமைச்சர் வருகையை முன்னிட்டு அனுமதி மறுக்கப்பட்டது. இதனால் குழந்தைகளுடன் வந்த பொதுமக்கள் ஏமாற்றம் அடைந்தனர். மேலும் சிலர் துறைமுக பாதுகாவலர்களுடன் வாக்குவாதம் செய்து துறைமுக வாயிலை முற்றுகையிட்டனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.
Next Story

