விவசாயிகள் கருத்தரங்கம்

X
உளுந்துார்பேட்டை தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் விவசாயிகள் கருத்தரங்கம் நடந்தது.கள்ளக்குறிச்சி மாவட்ட கூட்டுறவு ஒன்றியம் மற்றும் இந்திய உழவர் உர கூட்டுறவு நிறுவனம் (இப்கோ) சார்பில் சர்வதேச கூட்டுறவு ஆண்டு முன்னிட்டு உளுந்துார்பேட்டை தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் விவசாயிகள் கருத்தரங்கம் நடந்தது. விழுப்புரம் மற்றும் கள்ளக்குறிச்சி மாவட்ட இப்கோ மேலாளர் ஹரிஷ் கவுதம் தலைமை தாங்கினார். கூட்டுறவு சங்க செயலாளர் பாண்டியன் முன்னிலை வகித்தார். இப்கோ களஅலுவலர் கலையரசன் வரவேற்றார். விளைநிலத்தில் பயன்படுத்தப்படும் செயற்கை உரங்களால் சுற்றுச்சூழலுக்கும், நிலத்திற்கும் அதிக தீமைகள் ஏற்படுகிறது. இதற்கு மாறாக மண், காற்று மற்றும் நீர் மாசுபாட்டை குறைக்கும் வகையில் தயாரிக்கப்பட்ட நானோ யூரியா, டி.ஏ.பி., பொட்டாஷ் உட்பட நானோ தயாரிப்புகளை பயன்படுத்துவதால் மகசூல் அதிகரித்து விவசாயிகளுக்கு கூடுதல் லாபம் கிடைக்கும். ட்ரோன்களை பயன்படுத்தி நானோ யூரியா தெளிப்பதன் மூலம் பயிரின் ஊட்டச்சத்து தரம் அதிகமாகுவதுடன், நோய் மற்றும் பூச்சி தாக்குதலை குறைக்கும் என அறிவுறுத்தி, விவசாயிகளுக்கு மரக்கன்றுகள் வழங்கப்பட்டது. கூட்டத்தில் கூட்டுறவு சங்க பணியாளர்கள், விவசாயிகள் பலர் கலந்து கொண்டனர்.
Next Story

