மது குடிக்க பணம் தராத தந்தையை அடித்துக் கொன்ற மகன் கைது

X
திருப்பூர் மாவட்டம் ஊத்துக்குளி அடுத்த சாம்ராஜ் பாளையம் பகுதியை சேர்ந்தவர் கிட்டான் (62) மாற்றுத்திறனாளியான இவர் ஆடு மேய்த்து வாழ்க்கை நடத்தி வருகிறார். இவரது மகன் முத்துக்குமார் (31), இவருக்கு திருமணம் ஆகி இரண்டு குழந்தைகள் உள்ள நிலையில் எந்த வேலைக்கும் செல்லாமல் மது அருந்திவிட்டு அப்பகுதியில் ரகளையில் ஈடுபடுவதை வாடிக்கையாக வைத்துள்ளார். நேற்று காலை மது அருந்த வேண்டும் என தனது தந்தை கிட்டான் இடம் பணம் கேட்டுள்ளார். குடிக்க பணம் தர மாட்டேன் வேலைக்கு செல் என அவரது தந்தை கூறியுள்ளார் இதனால் ஆத்திரமடைந்த முத்துக்குமார் அருகில் இருந்த கட்டையை எடுத்து சரமாரியாக தாக்கியுள்ளார். இதில் பலத்த காயமடைந்த கிட்டானை அருகில் இருந்த உறவினர்கள் மீட்டு ஊத்துக்குளி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர் அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்ட பின்னர் அவர் மேல் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார் அங்கு சிகிச்சை பலனின்றி இன்று காலை உயிரிழந்தார் இதனைத் தொடர்ந்து தந்தையை அடித்து கொலை செய்த மகன் முத்துக்குமாரை ஊத்துக்குளி போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். மது குடிக்க பணம் கேட்டு தராத தந்தையை மகன் அடித்து கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Next Story

