விரலில் சிக்கிய வளையத்தை மீட்டு உயிர் காத்த தீயணைப்பு வீரர்கள் – கோவையில் பரபரப்பு!

விரலில் சிக்கிய வளையத்தை மீட்டு உயிர் காத்த தீயணைப்பு வீரர்கள், மருத்துவர்கள் முடியாமல் தவித்த நிலையில் – இரண்டரை மணி நேரம் போராட்டம்.
கோவை புலியகுளத்தைச் சேர்ந்த பார்த்திபன் (24), தனது கை விரலில் அணிந்திருந்த மோதிரம் மற்றும் வளையத்தை கழற்ற முடியாமல் தவித்து வந்தார். வீக்கம் அதிகரித்ததால் அவர் கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். ஆனால் மருத்துவர்கள் வளையத்தை அகற்ற முடியாமல் திகைத்தனர். இந்நிலையில், விரலை வெட்ட வேண்டிய சூழ்நிலை உருவாகும் என அச்சமடைந்த பார்த்திபன், தீயணைப்பு மற்றும் மீட்புத் துறையினரை நாடினார். உடனடியாக சம்பவ இடத்துக்கு வந்த தீயணைப்பு வீரர்கள், மின்சாதனங்கள் மூலம் சுமார் இரண்டரை மணி நேரம் போராடி வளையத்தை துண்டித்து, அவரது விரலை பாதுகாத்தனர். வீக்கம் காரணமாக ஆபத்தான நிலை ஏற்பட்டிருந்ததால், உடனடி நடவடிக்கையால் உயிர் காப்பாற்றிய தீயணைப்பு வீரர்களுக்கு பார்த்திபன் நன்றி தெரிவித்தார்.
Next Story