தொப்பம்பட்டி-சாலையோரம் நின்றிருந்த முதியவர் மீது கார் மோதி விபத்து.

தொப்பம்பட்டி-சாலையோரம் நின்றிருந்த முதியவர் மீது கார் மோதி விபத்து.
தொப்பம்பட்டி-சாலையோரம் நின்றிருந்த முதியவர் மீது கார் மோதி விபத்து. ஈரோடு மாவட்டம் சூரம்பட்டி வலசு சாஸ்திரி ரோடு பகுதியைச் சேர்ந்தவர் ஆறுமுகம் வயது 65. இவர் வியாழக்கிழமை அன்று தென்னிலை காவல் எல்லைக்குட்பட்ட தொப்பம்பட்டி- கொடுமுடி சாலையில் நின்று கொண்டு இருந்தார். அப்போது திருப்பூர் மாவட்டம் வெள்ளகோவில் தீர்த்தம்பாளையம் பகுதியைச் சேர்ந்த துரைராஜ் வயது 65 என்பவர் வேகமாக ஓட்டி வந்த கார் ஆறுமுகம் மீது மோதி விபத்து ஏற்பட்டது. இதில் பலத்த காயமடைந்த ஆறுமுகத்தை ஈரோட்டில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். இந்த சம்பவம் அறிந்த ஆறுமுகத்தின் மகன் மாதப்பன் வயது 47 என்பவர் அளித்த புகாரில் தென்னிலை காவல் துறையினர் விபத்து ஏற்படுத்திய துரைராஜ் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர்.
Next Story