கோவையில் கோலாகலமாக ஓணம் பண்டிகை கொண்டாட்டம் !
கோவை சித்தாப்புதூரில் உள்ள ஐயப்பன் கோவிலில், மலையாள மக்கள் குடும்பத்துடன் வந்து சாமி தரிசனம் செய்து ஓணம் பண்டிகையை கொண்டாடினர். பாரம்பரிய உடையுடன் கோவிலுக்கு வந்த பக்தர்கள், கொடிக்கம்பத்தின் கீழ் போடப்பட்ட அத்திப்பூ கோலத்தை ஆர்வமுடன் ரசித்தனர். ஓணம் திருவிழாவை ஒட்டி கோவிலில் குழந்தைகளுக்கு சோறு ஊட்டும் நிகழ்ச்சியும் நடைபெற்றது. இந்நாளில் பிறந்த குழந்தைகளுக்கு முதல் முறையாக சோறு ஊட்டுவது ஐதீகமாகும். ஓணம் பண்டிகை கேரளாவில் மட்டுமல்லாமல், தமிழ்நாட்டின் சென்னை, நீலகிரி, கோவை, கன்னியாகுமரி உள்ளிட்ட பகுதிகளிலும் கோலாகலமாகக் நேற்று கொண்டாடப்பட்டது.
Next Story




