மேல மாயனூர் மின் சாரம் தாக்கி இளைஞர் உயிரிழப்பு.

மேல மாயனூர் மின் சாரம் தாக்கி இளைஞர் உயிரிழப்பு.
மேல மாயனூர் மின் சாரம் தாக்கி இளைஞர் உயிரிழப்பு. கரூர் மாவட்டம் கிருஷ்ணராயபுரம் தாலுக்கா கீழ முனையனூர் காலனி தெருவை சேர்ந்தவர் பெருமாள் வயது 21. இவர் வியாழக்கிழமை இரவு 8 மணி அளவில் மேல மாயனூரில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சிக்கு சீரியல் லைட் போடும் பணியில் ஈடுபட்டார். அப்போது மின்சாரம் நின்று போய் இருந்தது.அதனால் டிரான்ஸ்பார்மரில் ஏறி பீஸ் போடும் வேலையில் ஈடுபட்டார். அப்போது எதிர்பாராத விதமாக மின்சாரம் தாக்கி தூக்கி எறியப்பட்ட அவரை கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் இறந்து விட்டதாக தெரிவித்தனர். இந்த சம்பவம் அறிந்த பெருமாளின் தந்தை பழனியப்பன் அளித்த புகாரில் மாயனூர் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
Next Story