காவல் ஆய்வாளர்களுக்கு எஸ்பி நினைவு பரிசு வழங்கி பாராட்டு.

X
தூத்துக்குடி மாவட்டத்திற்குள் உள்ள காவல் நிலையங்களில் வழக்குப்பதிவு, வழக்கின் விசாரணை, நீதிமன்ற பணி உட்பட அனைத்து பணிகளிலும் சிறப்பாக நடவடிக்கை மேற்கொண்டமைக்காக விளாத்திகுளம், தெர்மல்நகர் ஆகிய நிலையங்களை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் சிறந்த பணிகளின் அடிப்படையில் தேர்வு செய்தார். அதேபோன்று காவல் நிலையத்தில் கொடுக்கப்பட்ட மனுக்களின் மீது விரைந்து நடவடிக்கை எடுத்து சிறப்பாக செயல்பட்டதற்காக புதுக்கோட்டை, சிப்காட் ஆகிய காவல் நிலையங்களும், அதிகமான வழக்குகளை E-filing முறையில் நீதிமன்றத்தில் கோப்புக்கு எடுக்க விரைந்து நடவடிக்கை மேற்கொண்டமைக்காக கோவில்பட்டி மேற்கு மற்றும் குளத்தூர் ஆகிய காவல் நிலையங்களும் தூத்துக்குடி மாவட்டத்திற்குள் தேர்வு செய்யப்பட்டடு மேற்படி 6 காவல் நிலையங்களின் சிறப்பான நடவடிக்கைகளுக்காக அதன் காவல் நிலைய ஆய்வாளர்களுக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. ஆல்பர்ட் ஜான் மாவட்ட காவல் அலுவலகத்தில் வைத்து நினைவு பரிசு வழங்கி பாராட்டினார்.
Next Story

