நீத்தார் நினைவு சின்னத்தில் மழை தூவி மரியாதை.

மதுரையில் நீத்தார் நினைவு சின்னத்தில் காவல் ஆணையர் மரியாதை செலுத்தினார்.
தமிழகத்தில் காவலர் தினம் கொண்டாடப்படும் நிலையில் இன்று (06.09.2025) மதுரை காவல் ஆணையர் லோகநாதன் தலைமையில் மாநகர காவல் ஆயுதப்படை மைதானத்தில், பணியின் போது வீரமரணமடைந்த காவலர்களின் நினைவாக அமைக்கப்பட்டுள்ள நீத்தார் நினைவுச் சின்னத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டு , மக்களுக்கு சிறப்பாக பணியாற்றிட உறுதிமொழி எடுத்துக்கொள்ளப்பட்டது. இதில் காவல்துறை துணைத்தலைவர் (தென் மண்டலம்), மாநகர காவல் துணை ஆணையர்கள் , காவல் அதிகாரிகள் மற்றும் காவல் ஆளிநர்கள் கலந்து கொண்டனர்.
Next Story