முதலமைச்சர் வருகை தொடர்பான மேயர் தலைமையில் ஆலோசனை கூட்டம்.

X
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர்க்கு வரும் 11ஆம் தேதி அன்று முதலமைச்சர் மு க ஸ்டாலின் பல்வேறு அரசு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக வருகை தர உள்ளார். இது தொடர்பான ஆயத்தப் பணிகளை மேற்கொள் வது குறித்து ஓசூர் மாநகராட்சியில் மேயர் எஸ் ஏ சத்யா தலைமை யில் அவசர ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் துணை மேயர்ஆனந்தையா, மாநகர ஆணையாளர் சபீர் ஆலம், மாநகர் சுகாதார அலுவலர் மற்றும் பொறியாளர்கள் உள்ளிட்ட மாநகராட்சி அதிகாரிகள் பங் கேற்றனர். மேலும் மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள ஆக்கிரமிப்புகள் உடனடியாக அகற்றப் படுவதற்கான நட வடிக்கைகளும் மேற் கொள்ளப்படும் என்று அவர் தெரிவித்தார்.
Next Story

