சிவகங்கை மருத்துவக் கல்லூரியில் சேர விண்ணப்பிக்கலாம்

X
அரசு சிவகங்கை மருத்துவக் கல்லூரியில் 2025-2026 ஆம் கல்வியாண்டிற்கான மருத்துவம் சார்ந்த சான்றிதழ் படிப்புகளில் காலியாக உள்ள இடங்களை மாவட்ட அளவில் நிரப்புவதற்காக சேர்க்கை நடைபெறவுள்ளது. மயக்கமருந்து டெக்னீஷியன் 18 இடங்களும், தியேட்டர் டெக்னீஷியன் 19 இடங்களும் காலியாக உள்ளது. 31.12.2025 அன்று விண்ணப்பதாரர் 17 வயதை நிறைவு செய்திருக்க வேண்டும். தேர்வுக் குழுவால் பரிந்துரைக்கப்பட்டவாறாக, பத்தாம் வகுப்பு / மேல்நிலைப் பள்ளிப் படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். அரசு சிவகங்கை மருத்துவக் கல்லூரி முதல்வர் அலுவலகத்தில் 08.09.2025 முதல் 12.09.2025 வரை விண்ணப்பங்களை இலவசமாக பெற்று கொள்ளலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை 12.09.2025 ஆம் தேதிக்குள்ளோ அல்லது அதற்கு முன்னதாகவோ அரசு சிவகங்கை மருத்துவக் கல்லூரி முதல்வர் அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டும். மாற்றத்திறனாளிகளுக்கு 5 சதவீதம் இடஒதுக்கீடு உண்டு. பெறப்பட்ட விண்ணப்பங்களின் அடிப்படையில் தகுதிப் பட்டியல் 16.09.2025 அன்று வெளியிடப்படும். வகுப்புகள் அக்டோபர் 06 ஆம் தேதியன்று தொடங்கும். இந்தப் பாடப்பிரிவுகளில் சேர்க்கப்பட்ட மாணவர்கள், பொருந்தக்கூடிய விதிகளுக்குட்பட்டு, "வெற்றி நிச்சயம்" திட்டத்தின் கீழ் உதவித்தொகை பெறத் தகுதியுடையவர்கள் என மருத்துவக் கல்லூரி நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது
Next Story

