காவலர் தின நாளில் எஸ். பி. அஞ்சலி

காவலர் தின நாளில் எஸ். பி. அஞ்சலி
X
உயிரிழந்த போலீசாருக்கு
ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 6ம் தேதி தமிழ்நாடு காவலர் தினம் கடைபிடிக்கப்படுகிறது. இதையொட்டி பணியின் போது உயிரிழந்த காவலர்களுக்கு வீரவணக்கம் செலுத்தப்பட்டு, உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடைபெறும். அதன்படி இன்று (6ம் தேதி) காவலர்கள் தினம் கடைபிடிக்கப் பட்டது. இதையொட்டி நாகர்கோவில் ஆயுதப்படை மைதானத்தில் பணியின் போது உயிரிழந்த காவலர்களின் நினைவாக உள்ள நினைவு ஸ்தூபியில் வீரவணக்கம் செலுத்தும் நிகழ்ச்சி நடந்தது. எஸ்பி ஸ்டாலின் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார். பின்னர் எஸ்.பி. தலைமையில் போலீசார் வீரவணக்க உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர். நிகழ்ச்சியில் ஏடிஎஸ்பி மதியழகன், ஏ.எஸ். பி. லலித் குமார் மற்றும் போலீஸ் அதிகாரிகள் பங்கேற்றனர். தொடர்ந்து கண்காட்சி நடந்தது. பின்னர் போலீஸ் பொதுமக்கள் நல்லுறவு விளையாட்டுப் போட்டிகள் நடந்தன.
Next Story