திருவட்டார் ஆதிகேசவன் கோவிலில் ஓணவில் சமர்ப்பிப்பு

திருவட்டார் ஆதிகேசவன் கோவிலில் ஓணவில் சமர்ப்பிப்பு
X
திருவோணம் முன்னிட்டு
குமரி மாவட்டம் திருவட்டார் ஆதிகேசவ பெருமாள் கோவிலில் ஓணப்பண்டிகை நாளில் ஓண வில் சமர்ப்பிப்பது வழக்கம். இது மன்னராட்சி காலத்தில் இருந்தே நடைமுறையில் உள்ளது.  ஓண நாளில் மாலையில்  ஆதிகேசவப்பெருமாள் மற்றும் கிருஷ்ணன் உருவம் செதுக்கப்பட்டு வர்ணம் பூசப்பட்ட ஓண வில்களை பட்டுத்துணியில் மூடி தென்மேற்கு மூலையில் வைப்பார்கள்.   ஆதிகேசவபெருமாள் மற்றும் ஸ்ரீகிருஷ்ணன் ஸ்ரீபலி பூஜை நடைபெறும்போது,  அந்த   வில்கள் சமர்பிக்கப்படும்.    இந்நிகழ்ச்சி நேற்று மாலை நடந்தது.  ஓணவில்களை  தயாரித்த  தச்சர் சுவாமி முன்பு அவைகளை  சமர்பித்தார்.  பின்னர் அர்ச்சகர்கள் ஓணவில்களை ஏந்தி ஸ்ரீபலி விக்கிரகங்கள் அருகில் சென்றனர். இதையடுத்து  ஸ்ரீ பலி விக்கிரகங்களுடன்  மேள தாளம் முழங்க ஓணவில்களுடன் கோவில் பிரகாரத்தைச்சுற்றி வந்தனர்.  தொடர்ந்து ஓணவில்கள் கிருஷ்ண சாமி சன்னதியிலும், ஆதிகேசவப்பெருமாள் சன்னதியிலும் வைக்கப்பட்டது. பின்னர் தீபாராதனை நடந்தது.   ஏற்றப்பட்டது.   ஏராளமான பக்தர்கள் நிகழ்ச்சி
Next Story