வீரமரணம் அடைந்த காவலர்களுக்கு மௌன அஞ்சலி

X
திருப்பத்தூர் மாவட்டம் வீரமரணம் அடைந்த காவலர்களுக்கு மௌன அஞ்சலி 1859 ஆம் ஆண்டு மெட்ராஸ் காவல் சட்டத்தை நிறைவேற்றி, நவீன மற்றும் அமைப்புரீதியான காவல்துறை தோற்றுவிக்கப்பட்ட செப்டம்பர் 6 ஆம் நாள் இனி ஆண்டுதோறும் காவலர் நாளாக கொண்டாடப்படும் என தமிழக முதல்வர் பிறப்பித்த அரசாணையின்படி இன்று திருப்பத்தூர் நகர காவல் நிலையத்தில் அமைந்துள்ள காவலர் நினைவிடத்தில் வீரமரணம் அடைந்த காவலர்களை போற்றும் விதமாக திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சியாமளா தேவி மலர்தூவி வீரவணக்கம் மற்றும் ஒரு நிமிடம் மௌன அஞ்சலி செலுத்தினார். பின்னர் மாவட்ட ஆயுதப்படை மைதானத்தில் இந்திய அரசியலமைப்பின் பாலும், தமிழ்நாடு காவல்துறையின், உயரிய நோக்கங்களின் பாலும், நான் உண்மையான ஈடுபாடும் உளமார்ந்த பற்றும் கொண்டிருப்பேன் என்று மனமாற உறுதி கூறுகிறேன். எந்தவித அச்சமோ விருப்பு வெறுப்போ இன்றி அனைத்து தரப்பு மக்களுக்கும் நியாய உணர்வுடன் என் கடமைகளை நிறைவேற்றுவேன் என்றும் உறுதியளிக்கிறேன் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சியாமளா தேவி தலைமையில் காவலர்கள் உறுதிமொழி ஏற்றனர். நிகழ்ச்சியில் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் கோவிந்தராசு, காவல் துணை கண்காணிப்பாளர்கள் மற்றும் காவல்துறையினர் பங்கேற்றனர். மாவட்டத்தில் அனைத்து காவல் நிலையங்களிலும் காவலர் தினம் உறுதிமொழி மேற்கொள்ளப்பட்டது.
Next Story

