ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே முன்பகை காரணமாக ஆட்டோ ஓட்டுனரை திமுகவின் ஆதரவாளரான மற்றொரு ஆட்டோ ஓட்டுநர் ஆட்டோவை வைத்து ஏற்றி கொலை செய்த சம்பவம் ஸ்ரீவில்லிபுத்தூரில் பரபரப்பை ஏற்பட

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே முன்பகை காரணமாக ஆட்டோ ஓட்டுனரை திமுகவின் ஆதரவாளரான மற்றொரு  ஆட்டோ ஓட்டுநர் ஆட்டோவை வைத்து ஏற்றி கொலை செய்த சம்பவம் ஸ்ரீவில்லிபுத்தூரில் பரபரப்பை ஏற்பட
X
ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே முன்பகை காரணமாக ஆட்டோ ஓட்டுனரை திமுகவின் ஆதரவாளரான மற்றொரு ஆட்டோ ஓட்டுநர் ஆட்டோவை வைத்து ஏற்றி கொலை செய்த சம்பவம் ஸ்ரீவில்லிபுத்தூரில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.*
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே முன்பகை காரணமாக ஆட்டோ ஓட்டுனரை திமுகவின் ஆதரவாளரான மற்றொரு ஆட்டோ ஓட்டுநர் ஆட்டோவை வைத்து ஏற்றி கொலை செய்த சம்பவம் ஸ்ரீவில்லிபுத்தூரில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் தேரடி வீதியில் இந்தியன் வங்கி அருகே ஆட்டோ ஸ்டாண்டில் ஆட்டோ ஓட்டி வருபவர்கள் சக்கரகுளம் தெருவை சேர்ந்த செந்தில், நம்பி நாயுடு தெருவை சேர்ந்த திமுக ஆதரவாளர் பொன்ராஜ் இருவருக்கும் சவாரி எடுப்பதில் அடிக்கடி தகராறு ஏற்பட்டதாகவும் கடந்த ஆறு மாதங்களுக்கு மேலாக இருவருக்கும் முன்பகை இருந்து வந்ததாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில் இன்று செந்தில் என்பவர் பொன்ராஜ் குடும்பத்தினரிடம் தகராறில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது இந்நிலையில் கற்பக விநாயகர் கோவில் தெரு அருகே செந்தில் சாலையில் நடந்து வந்த போது திமுகவின் ஆதரவாளர் பொன்ராஜ் தான் ஓட்டி வந்த ஆட்டோவை அதிவேகமாக இயக்கி செந்தில் மீது பலமாக மோதியதில் செந்தில் தூக்கி வீசப்பட்டு பின் தலையில் அடிபட்டு விழுந்து சுயநினைவின்றி கிடந்துள்ளார். அருகே இருந்தவர்கள் பொன்ராஜை சத்தம் போட்டு அதே ஆட்டோவில் செந்திலை தூக்கிக்கொண்டு ஸ்ரீவில்லிபுத்தூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சேர்த்த நிலையில் செந்திலை பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்த நிலையில் செந்திலின் உடல் உடற்கூறு ஆய்வுக்காக பினவறையில் வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தகவல் அறிந்து வந்த நகர் காவல் துறையினர் பொன்ராஜை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். முன்பகை காரணமாக ஆட்டோ ஓட்டுனர் ஒருவர் மற்றொரு ஆட்டோ ஓட்டுனரை கொலை செய்த சம்பவம் ஸ்ரீவில்லிபுத்தூர் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Next Story