தமிழ்நாடு காவலர் தினத்தையொட்டி காவல்துறை விழிப்புணர்வு நிகழ்ச்சியை எஸ்.பி பங்கேற்பு.

தமிழ்நாடு காவலர் தினத்தையொட்டி  காவல்துறை  விழிப்புணர்வு நிகழ்ச்சியை எஸ்.பி பங்கேற்பு.
X
பழையது முதல் நவீன துப்பாக்கிகள் வரை கண்காட்சியில் வைக்கபட்டிருந்தன
மெட்ராஸ் மாவட்ட காவலர் சட்டம் நிறைவேற்றப்பட்ட நாளான செப்டம்பர் 6 ம் தேதியை தமிழ்நாடு காவலர் தினமாக கொண்டாப்பட்டு வருகிறது. அதன்படி நாமக்கல் மாவட்ட காவல்துறை சார்பில் காவலர் தினத்தையொட்டி நாமக்கல் பூங்கா சாலையில் சாலை பாதுகாப்பு, சைபர் குற்றம் குறித்த விழிப்புணர்வு கண்காட்சி நடைபெற்றது. இந்த விழிப்புணர்வு நிழச்சியை மாவட்ட எஸ்.பி விமலா தொடங்கி வைத்து பார்வையிட்டார். விழிப்புணர்வு கண்காட்சியில் சாலை பாதுகாப்பு குறித்தும், சைபர் குற்றம் ஏற்பட்டால் எவ்வாறு தொடர்பு கொள்வது மேலும் காவலர்கள் பயன்படுத்தி சீருடைகள், வாகனத்தின் புகைப்படங்களும் இடம் பெற்றிருந்தன. காவலர்கள் பயன்படுத்திய பழைய துப்பாக்கி முதல் நவீன துப்பாக்கிகளும், பாதுகாப்பு உடைகள், புல்லட்களும் வைக்கப்பட்டிருந்தன. கண்காட்சியினை பார்க்க வந்த பொதுமக்களுக்கு ஒவ்வொரு துப்பாக்கியின் செயல்பாடுகள், குற்றச் சம்பவங்கள் நடைபெற்றால் எவ்வாறு தொடர்பு கொள்வது குறித்து போலீசார் விளக்கங்களை கூறினர். இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியில் ஏ.டி.எஸ்.பி விஜயராகவன், போக்குவரத்து காவல் ஆய்வாளர் வெங்கடாசலம் உள்ளிட்ட போலீசார் கலந்து கொண்டனர்
Next Story