ஒன்றிய அரசின் ஜிஎஸ்டி கவுன்சில் கூட்ட வரி விகிதாச்சார அறிவிப்பு அச்சகத் தொழில் முனைவோர்களுக்கு ஏமாற்றமே!- காலண்டர், டைரி விலை உயரும்- நோட்டுக்களின் விலை குறைய வாய்ப்பில்லை!!

ஒன்றிய அரசின் ஜிஎஸ்டி கவுன்சில் கூட்ட வரி விகிதாச்சார அறிவிப்பு அச்சகத் தொழில் முனைவோர்களுக்கு ஏமாற்றமே!- காலண்டர், டைரி விலை உயரும்- நோட்டுக்களின் விலை குறைய வாய்ப்பில்லை!!
X
ஒன்றிய அரசின் ஜிஎஸ்டி கவுன்சில் கூட்ட வரி விகிதாச்சார அறிவிப்பு அச்சகத் தொழில் முனைவோர்களுக்கு ஏமாற்றமே!- காலண்டர், டைரி விலை உயரும்- நோட்டுக்களின் விலை குறைய வாய்ப்பில்லை!!
சிவகாசி- ஒன்றிய அரசின் ஜிஎஸ்டி கவுன்சில் கூட்ட வரி விகிதாச்சார அறிவிப்பு அச்சகத் தொழில் முனைவோர்களுக்கு ஏமாற்றமே!- காலண்டர், டைரி விலை உயரும்- நோட்டுக்களின் விலை குறைய வாய்ப்பில்லை!! ஒன்றிய அரசின் 56-வது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தின் போது தற்போது நடைமுறையி லிருக்கும்12 மற்றும் 28 சதவீதங்களின் வரி விகிதங்கள் நீக்கப்பட்டு, 5- மற்றும்18 சதவீதங்களின் வரிவிதிப்பு மட்டுமே தொடர ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. இதன் மூலமாக பெரும்பாலான பொருட்களுக்கு வரி முற்றிலும் நீக்கப்பட்டுள்ளதோடு மட்டுமின்றி, பல்வேறு பொருள்களுக்கான வரி குறைக்கப்பட்டுள்ளது. ஆனால் தொழில் நகரமான சிவகாசியின் பிரதான தொழிலாக விளங்கி வரும் அச்சகத்திற்குத் தேவையான முக்கிய மூலப்பொருள் காகிதத்திற்கான வரியை 12 சதவீதத்திலிருந்து 18- சதவீதமாக உயர்த்தியிருப்பது அச்சகத் தொழில் முனைவோர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தமிழ்நாடு அனைத்து தொழில் முனைவோர் கூட்ட மைப்பினர் கூறும்போது :- அத்தியாவசிய பொருட்களை 5- சதவீத வரி அ டுக்கிற்கு கொண்டு வந்துள்ளது வரவேற்று, காகிதத்திலான கல்வி அறிவு சார்ந்த பொருட்களுக்கு முழு வரிவிலக்களித்திருப்பதை பெரிதும் வரவேற்பதாகவும், அதே வேளையில் தற்போதுள்ள 12 சதவீத அடுக்கி லிருக்கும் காகிதம் 5- சதவீதமாக குறைக்கப்படுமென எதிர்பார்த்திருந்த நிலையில், அதனை 18- சதவீதவரி அடுக்கிற்கு உயர்த்தி இருப்பது அதிர்ச்சி யளிக்கிறதென்றனர். இதன் காரணமாக தினசரி மற்றும் மாதக் காலண்டர்கள், டைரிகள், லேபிள்கள் உள்பட காகிதத்தால் உருவாக்கம் பெறும் பல்வேறு பொருட்கள் வழக்கத்தை விட 6- சதவீத விழுக்காடு விலை உயர்வை சந்திக்க வழி வகுக்கும். இது காகிதத்தை மூலப்பொருளாகக் கொண்டு இயங்கி வரும் சிறு-குறுந் தொழில் நிறுவனங்களை பெரிதும் பாதிக்கும் என்பதை கருத்தில் கொண்டு ஒன்றிய அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டு மென்றனர். கல்வியறிவு சார்ந்த காகிதத்தால் உற்பத்தியாகும் நோட்டுப் புத்தகங்கள் போன்றவைகளுக்கு முழு வரி விலக்கு அறிவிக்கப்பட்டிருந்தாலும் அவற்றை தயாரிக்க தேவையான முக்கிய மூலப் பொருளான காகிதத்தை கொள்முதல் செய்வதற்கான வரியை 12 சதவீதத்திலிருந்து 6- சதவீதம் உயர்த்தி 18 சதவீதமாக அறிவித்திருப்பதால் அந்தக் கூடுதல் வரி விகிதாச்சாரம் நோட்டுப் புத்தகங்கள் உள்பட கல்வி அறிவு சார்ந்த பொருட்களின் மீதே திணிக்கப்படுவதால் விலைவாசி குறைய வாய்ப்பில்லை என நோட்டுப் புத்தகங்களுடன், கல்வியறிவு சார்ந்த பொருட்கள் தயாரிப்பாளர்கள் தெரிவித்துள்ளனர். பேட்டி:-1) ஜெயசங்கர்- காலண்டர் உற்பத்தியாளர், சிவகாசி. 2) ஆனந்தராஜன்- நோட்டுப் புத்தகம் தயாரிப்பாளர், சிவகாசி.
Next Story